காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளனர்


காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளனர்
x
தினத்தந்தி 18 May 2017 5:20 AM IST (Updated: 18 May 2017 5:20 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளனர் என்று எடியூரப்பா பரபரப்பு தகவலை கூறினார்.

பெங்களூரு

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளனர் என்று எடியூரப்பா பரபரப்பு தகவலை கூறினார்.

பா.ஜனதாவின் கொள்கை

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முன்னிலையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் நேற்று அரிசிகெரேயை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான பிரபுகுமார் பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு கட்சி கொடியை வழங்கி எடியூரப்பா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் எடியூரப்பா பேசியதாவது:-

பா.ஜனதாவின் கொள்கை, மக்களுக்கு ஆதரவான மத்திய அரசின் திட்டங்கள், பிரதமர் மோடியின் செயல்பாடுகள் ஆகியவற்றை பாராட்டி வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் எங்கள் கட்சியில் சேர்ந்து வருகிறார்கள். இன்று (அதாவது நேற்று) எனது முன்னிலையில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. பிரபுகுமார் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார். இது வரவேற்கத்தக்கது ஆகும்.

சில எம்.எல்.ஏ.க்களும் சேர உள்ளனர்

வரும் நாட்களில் இன்னும் அதிக எண்ணிக்கையில் மாற்று கட்சியினர் எங்கள் கட்சியில் வந்து சேருவார்கள். காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களும் பா.ஜனதாவில் சேர உள்ளனர். கர்நாடகத்தில் நிலவி வரும் வறட்சியை ஆய்வு செய்ய நாளை (இன்று) முதல் எனது சுற்றுப்பயணத்தை துமகூருவில் இருந்து தொடங்குகிறேன்.

இந்த சுற்றுப்பயணம் 45 நாட்கள் நடைபெறும். இதில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், ஈசுவரப்பா, மத்திய மந்திரிகள் அனந்தகுமார், சதானந்தகவுடா உள்ளிட்டவர்களும் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

இதில் முன்னாள் மந்திரி லட்சுமண் சவதி, பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story