டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 May 2017 4:15 AM IST (Updated: 19 May 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு

பல்லடம்,

பல்லடத்திலிருந்து ஆலுத்துபாளையம் செல்லும் ரோட்டில் ஒரு தோட்டத்து பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் டாஸ்மாக் கடை திறப்பதாக தகவல் தெரிய வந்ததும் அந்தப்பகுதியில் உள்ள மக்கள் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அங்கு திரண்டனர். இதையறிந்த பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகர், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசாரிடம் பொதுமக்கள் இங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது. வடுகபாளையம்புதூர் ஊராட்சியின் கிராமசபை கூட்டத்தில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று ஏற்கனவே தீர்மானமும் போடப்பட்டுள்ளது என்றும் கூறினார்கள்.

ஆகவே இங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது, மதுபாட்டில்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவும் மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

அங்கு டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அறிவிப்பு தட்டியும் வைக்கப்பட்டிருந்தது. மேலும் மக்கள் பிரதிநிதிகள் சிலர் மாவட்ட கலெக்டரை மற்றும் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் கடை அதிகாரிகளை பார்க்க சென்றனர். பின்னர் பொதுமக்கள் எதிர்ப்பால் டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் என்று டாஸ்மாக் பணியாளர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் எதிர்ப்பால் தோட்டத்துப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. 

Next Story