உயர்மின்அழுத்தம் காரணமாக வீடுகளில் டி.வி.க்கள் சேதம்

தூத்துக்குடி,
தூத்துக்குடி பூபாலராயர்புரம் 6-வது தெரு மேற்கு பகுதியில் உள்ள வீடுகளில் நேற்று மதியம் திடீரென டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வெடித்தன. அதில் இருந்து கரும்புகையும் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் மின் இணைப்புகளை துண்டித்தனர். அந்த பகுதியில் உள்ள சுமார் 25 வீடுகளில் உள்ள டி.வி., குளிர்சாதன பெட்டி, மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்து இருப்பது தெரியவந்தது. நேற்று மதியம் அந்த பகுதியில் திடீரென ஏற்பட்ட உயர்மின் அழுத்தம் காரணமாக இந்த பொருட்கள் சேதம் அடைந்தது தெரிய வந்தது. இது குறித்து மின்சார வாரிய அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து உயர்மின் அழுத்தம் ஏற்படாத வகையில் மின்சார ஒயர்களையும் சரி செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story