வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 1 Jun 2017 1:30 AM IST (Updated: 1 Jun 2017 12:01 AM IST)
t-max-icont-min-icon

வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

வீர, தீர செயல் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

கல்பனா சாவ்லா விருது

ஆண்டுதோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப்பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2017–ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் சமுதாயத்தில் வீர, தீர சாதனை புரிந்த பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

8–ந்தேதிக்குள்...

தகுதியுடையவர்கள் உரிய சாதனை சான்றுகளுடன் விண்ணப்பங்களை வருகிற 8–ந்தேதி மாலை 5 மணிக்குள் “மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி–1, தொலைபேசி எண்: 0461–2321149“ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ் தெரிவித்து உள்ளார்.

Next Story