ஆவடியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 48 பேர் கைதாகி விடுதலை


ஆவடியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் 48 பேர் கைதாகி விடுதலை
x
தினத்தந்தி 1 Jun 2017 4:15 AM IST (Updated: 1 Jun 2017 12:26 AM IST)
t-max-icont-min-icon

சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து உள்ள மத்திய அரசை கண்டித்தும்,

ஆவடி,

அந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருவள்ளூர் மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று காலை ஆவடி அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்ட தலைவர் தமிழ்சிற்பி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆவடி நாகராசன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 48 பேரை ஆவடி போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story