சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மகிளா கோர்ட்டு தீர்ப்பு
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்தவர் குமரேசன் (வயது 23). டெய்லர். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்று கற்பழித்துள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறையை சேர்ந்தவர் குமரேசன் (வயது 23). டெய்லர். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்று கற்பழித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை பெரம்பலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மலர்கொடி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து குமரேசனை கைது செய்து பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த், சிறுமியை கற்பழித்த குமேரசனுக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து போலீசார் குமரேசனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.