கர்நாடக போலீஸ் துறை மந்திரி பதவி: பரமேஸ்வர் இன்று ராஜினாமா செய்கிறார்
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் போலீஸ் துறை மந்திரி என இரண்டு பதவிகளை வகித்து வந்த பரமேஸ்வரை கட்சிப்பணியை மட்டும் கவனிக்கும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் போலீஸ் துறை மந்திரி என இரண்டு பதவிகளை வகித்து வந்த பரமேஸ்வரை கட்சிப்பணியை மட்டும் கவனிக்கும்படி காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டு உள்ளது. அதனை தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) தனது மந்திரி பதவியை பரமேஸ்வர் ராஜினாமா செய்கிறார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக கடந்த 6 ஆண்டுகளாக பரமேஸ்வர் இருந்து வருகிறார்.
புதிய தலைவர் கோரிக்கை
அதோடு போலீஸ் துறை மந்திரியாகவும் பரமேஸ்வர் இருக்கிறார். இதனால் அவரால் கட்சியை பலப்படுத்த முழு கவனம் செலுத்த முடியவில்லை என்று காங்கிரஸ் நிர்வாகிகளில் ஒரு பிரிவினர் கூறினர். மேலும் அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை கட்சியின் புதிய தலைவராக நியமிக்க வேண்டும் என்று சமீபத்தில் பெங்களூரு வந்திருந்த மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம் கூறினர். இதுகுறித்து மே மாதம் 31-ந் தேதிக்குள்(அதாவது நேற்று) முடிவு எடுக்கப்படும் என்று வேணுகோபால் அறிவித்தார்.
இந்த நிலையில் முதல்-மந்திரி சித்த ராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் மற்றும் கட்சியின் முன்னணி தலைவர்கள் கடந்த 29-ந் தேதி டெல்லி சென்றனர். அங்கு அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து, கட்சிக்கு புதிய தலைவராக யாரை நியமிப்பது மற்றும் தலைவராக பரமேஸ்வரையே நீடிக்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் கருத்துகளை ராகுல்காந்தி தனித்தனியாக கேட்டு அறிந்தார்.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் திவேதி நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
பரமேஸ்வரே நீடிப்பார்
“அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளனர். கர்நாடக சட்டமன்ற தேர்தல், முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் எதிர்கொள்ளப்படும். கர்நாடக காங்கிரஸ் தலைவராக பரமேஸ்வரே நீடிப்பார். ஆனால் அவரது முழு பலமும் கவனமும் கட்சியை பலப்படுத்துவதற்கு தேவைப்படுவதால், அவர் வகிக்கும் மந்திரி பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
செயல் தலைவராக உள்ள தினேஷ் குண்டுராவுடன் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பட்டீலும் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். தினேஷ் குண்டுராவ், தெற்கு கர்நாடக காங்கிரஸ் பணிகளையும், எஸ்.ஆர்.பட்டீல் வட கர்நாடக காங்கிரஸ் பணிகளையும் கவனிப்பார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக் குமார் தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்படு கிறார்.
கே.எச்.முனியப்பா
முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா எம்.பி. காங்கிரஸ் செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார். முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் போலீஸ் துறையையும் கவனிக்கும் பரமேஸ்வர் இன்று(வியாழக்கிழமை) தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. இதற்காக அவர் பத்திரிகையாளர் சந்திப்பை இன்று காலை 11.30 மணிக்கு கூட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவி மீது மந்திரி டி.கே.சிவக்குமார் கண் வைத்திருந்தார். இதற்காக அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார். கட்சி தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாயின. ஆனால் இதற்கு சித்தராமையா உள்பட இதர தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் டி.கே.சிவக்குமாருக்கு தலைவர் பதவி கிடைக்கவில்லை. இதனால் அவர் அதிருப்தி அடைந்துள்ளார். அவரை திருப்திப்படுத்த தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கூட்டு தலைமையின் கீழ்...
அதுபோல் கர்நாடக சட்டமன்ற தேர்தல் சித்தராமையா தலைமையில் எதிர்கொள்ளப்படும் என்று முன்பு மேலிட பொறுப்பாளராக இருந்த திக்விஜய்சிங் கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட ஒருவரது(சித்தராமையா) தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளக்கூடாது, கூட்டு தலைமையின் கீழ் தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதோடு திக்விஜய்சிங்கின் கருத்துக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் சித்தராமையா தலைமையின் கீழ் எதிர்கொள்ளப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பதன் மூலம் காங்கிரசில் எழுந்த அனைத்து சந்தேகங்களுக்கும் பூசல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த நிர்வாகிகள் பலருக்கும் பதவிகள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளதால் அதிருப்திக்கு இடம் இருக்காது என்று காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கூறினர்.

Related Tags :
Next Story