நிர்வாக சீர்கேடுகளை விசாரிக்க வலியுறுத்தி புதுவை விற்பனைக்குழு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நிர்வாக சீர்கேடுகளை விசாரிக்க வலியுறுத்தி புதுவை விற்பனைக்குழு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 May 2017 10:00 PM GMT (Updated: 31 May 2017 8:44 PM GMT)

புதுவை விற்பனைக்குழு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் புதுவை தலைமை நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி,

புதுவை விற்பனைக்குழு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு சார்பில் புதுவை தலைமை நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்ட 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை விற்பனைக்குழு ஊழியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும், விற்பனைக்குழு ஊழியர்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட நியமன விதியை நடைமுறையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், விற்பனைக்குழுவில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடுகள் மற்றும் நடைமுறை மீறல்கள் பற்றி விசாரித்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழுவின் தலைவர் சேகர் தலைமை தாங்கினார். சிவக்குமார் முன்னிலை வகித்தார். புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் சீத்தாராமன், துணை பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் விற்பனைக்குழு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு போராட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story