மதுக்கடையை மூடக்கோரி சாலை மறியல் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பூதலூர் அருகே மதுக்கடையை மூடக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்காட்டுப்பள்ளி,
தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே மாரநேரி கிராமத்தில் மதுக்கடை இயங்கி வருகிறது. வங்கி, மழலையர் பள்ளி ஆகியவற்றுக்கு அருகே செயல்பட்டு வரும் இந்த மதுக்கடைக்கு வருபவர்கள் தங்களுடைய மோட்டார்சைக்கிள்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் இருந்து மதுக்கடையை அகற்ற வேண்டும் என பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மதுக்கடையை மூடக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று போராட்டத்தில் ஈடுபடுவதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜீவக்குமார், ஒன்றிய செயலாளர் காந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர் சம்சுதீன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் மாரநேரி மந்தை திடலில் இருந்து மதுக்கடையை நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் தாசில்தார் கஜேந்திரன் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக மாரநேரி-கடம்பங்குடி சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தையொட்டி மாரநேரி மதுக்கடை முன்பாக நேற்று போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story