வரி விதிப்புக்கு எதிர்ப்பு: கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டம்
ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், ஜெகதேவி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் கிடைக்கும் கிரானைட் கற்களை வாங்கி வந்து, அதை மெருகூட்டி தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு மெருகூட்டி தமிழகத்திற்குள் விற்பனை செய்யப்படும் கிரானைட் கற்களுக்கு 14.5 சதவீதம் வரியும், வெளி மாநிலங்களில் விற்பனை செய்யும் கற்களுக்கு 2 சதவீத வரியும் கட்டி வந்தனர்.இந்த நிலையில் மத்திய அரசின் புதிய ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் கிரானைட் கற்கள் அனைத்தும் ஆடம்பர பொருட்களின் பட்டியலில் கொண்டு வரப்பட்டு இதற்கு 28 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த புதிய வரி விதிப்பால் கிரானைட் தொழில் பாதிக்கப்படுவதோடு விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரானைட் தொழிற்சாலைகளை சேர்ந்த உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பர்கூர் - ஜெகதேவி சாலையில் அச்சமங்கலம் கூட் ரோடு அருகே ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரும்ப பெற வேண்டும்
இந்த போராட்டத்திற்கு மாவட்ட கிரானைட் தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் சங்க தலைவர்கள் சுரேஷ், சஞ்சய்மேத்தா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். செயலாளர் விபுல் ஜெயின் முன்னிலை வகித்தார். பொருளாளர் பிரேம்கோபால் வரவேற்று பேசினார்.
இது குறித்து மாவட்ட தலைவர் சுரேஷ் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் கிரானைட் கற்கள் மொசைக் கற்களின் விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மொசைக் கற்கள் ஆடம்பர பொருட்களின் பட்டியலில் வராமல் கிரானைட் கற்கள் மட்டும் ஆடம்பர பொருட்களின் பட்டியலில் கொண்டு வரப்பட்டு 28 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
புதிய வரி விதிப்பால் பல கிரானைட் தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு கிரானைட் கற்களை ஆடம்பர பொருட்களின் பட்டியலில் இருந்து விலக்கி, புதிய வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story