463 பயனாளிகளுக்கு ரூ.69¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
ஜவளகிரி கிராமத்தில் 463 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 83 ஆயிரத்து 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா ஜவளகிரி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். ஓசூர் உதவி கலெக்டர் சந்திரகலா முன்னிலை வகித்தார். இந்த முகாமில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவர்கள் மூலமாக விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் விளக்கி கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கதிரவன் பேசியதாவது:- மக்கள் தொடர்பு திட்டமானது அரசின் திட்டங்கள் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவதோடு, மக்களை தேடி கிராமங்களுக்கு சென்று இது போன்ற முகாம்களை அமைத்து அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது இந்த முகாமின் நோக்கமாகும்.
நலத்திட்ட உதவிகள்
தேன்கனிக்கோட்டை தாலுகா மலைகிராமங்கள் அதிகம் கொண்டுள்ள பகுதியாகும். இப்பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி சொட்டு நீர் பாசனம் அமைத்து அதிகளவில் சாகுபடி உற்பத்தி செய்து விவசாயிகள் பயனடைய வேண்டும் என்றார்.
இதையடுத்து இலவச வீட்டு மனைப்பட்டா, தாதுஉப்பு கலவை, தாலிக்கு தங்கம், கடன் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 463 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 83 ஆயிரத்து 748 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கதிரவன் வழங்கினார். பின்னர் ஜவளகிரி அரசு பள்ளியில் அவர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வசந்தா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சங்கரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பானுமதி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, மாவட்ட மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் இளையராஜா, வனச்சரகர் முருகேசன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். முடிவில் தாசில்தார் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story