மின்விளக்குகளை எரிய விடக்கோரி தீப்பந்தங்களை ஏந்தியபடி போராட்டம்


மின்விளக்குகளை எரிய விடக்கோரி தீப்பந்தங்களை ஏந்தியபடி போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2017 4:00 AM IST (Updated: 2 Jun 2017 2:15 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெத்திக்குப்பம் ரெயில்வே மேம்பாலத்தின் மீது இருபுறங்களிலும் 20–க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் உள்ளன.

கும்மிடிப்பூண்டி,

 அவை இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் மேற்கண்ட முக்கிய மேம்பாலத்தை கடந்து சென்னை– கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பொதுமக்களும், சுற்றுப்புறங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று வரும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் விபத்துகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேற்கண்ட பெத்திக்குப்பம் ரெயில்வே மேம்பாலத்தில் முறையாக மின்விளக்குகளை எரிய விடக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மேம்பாலத்தின் அருகே தீப்பந்தம் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி பகுதி செயலாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாவட்டத்தலைவர் தேவேந்திரன், கட்டுமான சங்கத்தலைவர் குமார், விவசாய சங்க மாவட்டத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


Next Story