மாட்டு இறைச்சிக்கு தடை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது
மாட்டு இறைச்சிக்கு மத்தியஅரசு தடை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கைது
தஞ்சாவூர்,
இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை விற்கக்கூடாது என மத்திய அரசு விதித்த தடையை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசு கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மாட்டு இறைச்சி உணவு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்த மாணவர் சூரஜை தாக்கியவர்களை கைது செய்யக்கோரியும் தஞ்சை ரெயிலடியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர். இதற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் தடையை மீறி மக்கள் அதிகாரம் அமைப்பினர் மண்டலக்குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் ஒருங்கிணைப்பாளர் தேவா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உடனே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

Related Tags :
Next Story