குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
வலங்கைமான் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள பாப்பாக்குடி ஊராட்சி பகுதியான புலவர்நத்தம் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 20 நாட்களாக மின் மோட்டார்கள் பழுதடைந்து இயங்காததால் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப முடியாமல் புலவர்நத்தம் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராம மக்கள் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டும், முறையாக மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் நேற்று புலவர்நத்தம் பஸ் நிறுத்தம் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த வலங்கைமான் தாசில்தார் இஞ்ஞாசிராஜ், ஒன்றிய ஆணையர் சண்முகம், போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் கிடைக்கவும், சீரான மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை இல்லை என்றால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story