டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
தேளூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியை அடுத்துள்ள சின்னநாகலூர், மண்ணுழி, பெரியநாகலூர், தேளூர் ஆகிய கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தேளூர் கிராமம் மண்ணுழி சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
முற்றுகை போராட்டம்
ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பெண்களுக்கும்,போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கூறுகையில்,மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசார் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பு கொடுப்பது வேடிக்கையாக இருக்கிறது.
கேலி செய்கின்றனர்
பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் டாஸ்மாக் கடை இருப்பதால் பெண்கள் மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் அச்சத்துடன் செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மதுப்பிரியர்கள் குடிபோதையில் பெண்களை ஆபாச வார்த்தை களால் திட்டி கேலி செய்கின்றனர். இந்த டாஸ்மாக் கடையை காலி செய்யாவிட்டால் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றனர். பின்னர் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story