யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த கட்டிட தொழிலாளி கைது
ஸ்ரீரங்கம் மேலூரில் யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த கட்டிட தொழிலாளியை வனத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சி,
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பது பழமொழி. இதற்கேற்றவாறு காடுகளில் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. இப்படி கொல்லப்படும் யானைகளின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுகின்றன. அந்த அளவுக்கு யானை தந்தங்கள் விலை மதிப்பற்ற பொருளாக கருதப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா மேலூர் கிராமத்தில் ஒரு வீட்டில் யானை தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக திருச்சி வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பறிமுதல்
இதனை தொடர்ந்து திருச்சி மண்டல வனப்பாதுகாவலர் திருநாவுக்கரசு, மாவட்ட வன அதிகாரி சதீஷ் ஆகியோர் உத்தரவுபடி, திருச்சி வனச்சரக அதிகாரி ரவிகிருஷ்ணன் தலைமையில், வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 யானை தந்தங்களை அதிகாரிகள் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர்.
அந்த யானை தந்தங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக ஸ்ரீரங்கம் நெடுந்தெருவை சேர்ந்த கருப்பண்ணன் மகன் பிரபுவை (வயது 26) வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிரபு நேற்று திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முக்கிய புள்ளிக்கு வலைவீச்சு
வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள பிரபு கட்டிட தொழிலாளியாவார். இந்த யானை தந்தங்கள் பெங்களூருவில் இருந்து தனக்கு கிடைத்ததாகவும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இதனை விற்பதற்காக பதுக்கி வைத்து இருந்ததாகவும் பிரபு வனத்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், யானை தந்தங்களை கடத்தி கொண்டு வந்த முக்கிய புள்ளி ஒருவரை வனத்துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story