இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் பார்வையாளராக ஷோபா எம்.பி. நியமனம்


இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் பார்வையாளராக ஷோபா எம்.பி. நியமனம்
x
தினத்தந்தி 2 Jun 2017 3:13 AM IST (Updated: 2 Jun 2017 3:12 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் வருகிற 8–ந் தேதி நடக்கிறது.

பெங்களூரு,

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் வருகிற 8–ந் தேதி நடக்கிறது. இங்கிலாந்து தேர்தல் பணி மி‌ஷன் கீழ் கர்நாடக பா.ஜனதாவை சேர்ந்த ஷோபா எம்.பி.யை(உடுப்பி–சிக்கமகளூரு) இங்கிலாந்து தேர்தல் பார்வையாளராக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நியமித்துள்ளார். நாளை(சனிக்கிழமை) முதல் வருகிற 10–ந் தேதி வரை ஷோபா இங்கிலாந்து நாட்டில் தங்கியிருந்து தேர்தல் பார்வையாளர் பணியை செய்வார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஷோபா எம்.பி., "எனக்கு அரசியலில் தான் அனுபவம். இதுபோன்ற தேர்தல் பார்வையாளர் பணியை நான் செய்தது இல்லை. என்னை பொறுத்த வரைக்கும் இந்த பணி எனக்கு புதியது. அங்கு எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படாமல் பார்வையாளராக செயல்பட வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நம்மூரில் தேர்தல் பார்வையாளராக வரும் அதிகாரிகள் எவ்வாறு செயல்படுகிறார்களோ அதே போல் தான் நானும் அங்கு செயல்பட வேண்டும். இந்த பணியில் எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்" என்றார்.


Next Story