பெண்ணை கற்பழித்து ரூ.3 லட்சம் மோசடி மந்திரவாதிக்கு வலைவீச்சு


பெண்ணை கற்பழித்து ரூ.3 லட்சம் மோசடி மந்திரவாதிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Jun 2017 3:53 AM IST (Updated: 2 Jun 2017 3:53 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை கற்பழித்து ரூ.3 லட்சம் மோசடி செய்த மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தானே,

பெண்ணை கற்பழித்து ரூ.3 லட்சம் மோசடி செய்த மந்திரவாதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மந்திரவாதி

தானேயை வசித்து வரும் 37 வயது பெண் ஒருவரின், தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் நண்பர் ஒருவர் மூலமாக பெண்ணிற்கு சாய்லால் ஹிராலால்ஜி என்ற மந்திரவாதி அறிமுகமானார். இவர் தனது சக்தியின் மூலம் பெண்ணின் தந்தையை குணப்படுத்துவேன் என கூறினார். இதையடுத்து பெண், மந்திரவாதியை தன் வீட்டிற்கு அழைத்து பூஜை செய்தார்.

கற்பழிப்பு

அப்போது மந்திரவாதி, 37 வயது பெண்ணிடம் நீ தான் என் முன் ஜென்ம மனைவி என கூறி வசியம் செய்தார். பின்னர் அவர் பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று கற்பழித்தார். மேலும் அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் வரை வாங்கினார்.

இந்தநிலையில் பெண், மந்திரவாதியிடம் இருந்து உறவை துண்டிக்க முடிவு செய்தார். ஆனால் மந்திரவாதி தனது ஆசைக்கு இணங்காவிட்டால் உல்லாசமாக இருக்கும்போது எடுத்த பெண்ணின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பிவிடுவேன் என மிரட்டினார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தானே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மந்திரவாதியை தேடி வருகின்றனர்.


Next Story