கைகளத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல் ஆய்வு


கைகளத்தூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு திஷாமிட்டல் ஆய்வு
x
தினத்தந்தி 3 Jun 2017 3:30 AM IST (Updated: 3 Jun 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக திஷாமிட்டல் கடந்த மே மாதம் 17–ந்தேதி பொறுப்பு ஏற்றார்.

பெரம்பலூர்,

அதனை தொடர்ந்து அவர் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். முதல்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் வேப்பந்தட்டை தாலுகா கைகளத்தூரில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு நேற்று சென்று அங்குள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். போலீஸ் நிலையத்தில் முகாமிட்டு இருந்த பொதுமக்களிடம் இருந்து புகார்மனுக்களை பெற்றார். அப்போது சப்–இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.


Next Story