டாஸ்மாக் கடைக்கு எதிராக கருப்புக்கொடி கட்டி போராட்டம்


டாஸ்மாக் கடைக்கு எதிராக கருப்புக்கொடி கட்டி போராட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:30 AM IST (Updated: 3 Jun 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடைக்கு எதிராக கருப்புக்கொடி கட்டி போராட்டம் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

 

ராஜபாளையம்,

ராஜபாளையம் ஆவரம்பட்டியில் டாஸ்மாக் கடையை மாற்ற கோரி 3–வது நாளாக கடையை முற்றுகையிட்டு கண்ணீர் அஞ்சலி பதாகை வைத்து நூதன காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

3–வது நாளாக போராட்டம்

ராஜபாளையம் ஆவரம்பட்டியில் குடியிருப்புக்கு மத்தியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது அதிகாரிகள் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என உறுதி அளித்த்தாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி ஜனநாயக மாதர் சங்கத்தினைச் சேர்ந்த 50–க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன் தினம் மதுபானக்கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு வரை நீடித்த போராட்டத்தை அடுத்து கடை திறக்கப்படவில்லை. போராட்டம் நடத்திய பெண்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உறுதியான பதில் எதுவும் கூறவில்லை. எனவே இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

இதிலும் முன்னேற்றம் ஏற்படாததால் நேற்று 3வது நாளாக கருப்பு கொடி கட்டியபடி, கடை முன்பு மற்றும் கூரைகளில் மாவட்ட ஆட்சியருக்கு கண்ணீர் அஞ்சலி என பதாகைகள் வைத்து 3வது நாளாக நூதனமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தை அறிந்த வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சு வார்;த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போகவே, பொது மக்கள் மீண்டும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தின் போது அவர்கள் தமிழக அரசுக்கும்,

மாவட்ட நிர்வாகத்தினருக்கும் எதிராக கண்டன முழக்கமிட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மனைவி வேலம்மாள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு பின்னர் அவர் கண் விழித்தார். காலை உணவருந்தாமல் வந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக தெரிய வந்தது.

மேலும் இக்கடையை குடியிருப்பு பகுதியில் இருந்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத வரையில் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


Next Story