குடியாத்தத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றகோரி ஆர்ப்பாட்டம்


குடியாத்தத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றகோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2017 4:15 AM IST (Updated: 3 Jun 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் டாஸ்மாக் கடைகளை அகற்றகோரி ஆர்ப்பாட்டம் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்

குடியாத்தம்,

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 11 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. நீதிமன்ற உத்தரவின்படி டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டு குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையில் உள்ள ஒரு கடை மட்டும் இயங்கியது.

இந்த நிலையில் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் சிவமதி கார்டன், சாமியார்மலை அடுத்த மாணிக்கம்நகர், அன்னை சோனியாநகர், செதுக்கரை பொன்னம்பட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தற்போது மீண்டும் கிராமப்புற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து குடியாத்தம் தாலுகா அலுவலகம் முன்பு தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க. நகர பொறுப்பாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் சாமிநாதன், நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.தேவராஜ், விடுதலை சிறுத்தைகள் செல்லையன், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் துரைசெல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகள் கிராமப்பகுதிகளில் தொடங்கப்படுவதை கண்டித்தும், புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு மறுவேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வி.ஜி.தனபால், ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் கள்ளூர் ரவி, டி.கிருஷ்ணமூர்த்தி, என்.இ.சத்யானந்தம் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story