நாகர்கோவிலில் உள்ள மத்திய அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட ரூ.20 லட்சம்
நாகர்கோவிலில் உள்ள மத்திய அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள மத்திய அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
583 பேர் விண்ணப்பம்நாகர்கோவில் கோணத்தில் மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் ஏ மற்றும் பி என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. 2016– 2017–ம் கல்வியாண்டில் 1–வது வகுப்பில் மட்டும் இந்த இரு பிரிவுகளிலும் 106 மாணவ– மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
ஆனால் இரண்டு பிரிவுகளிலும் அனுமதிக்கப்பட வேண்டிய மாணவ– மாணவிகளின் எண்ணிக்கை 80 பேர் மட்டுமே. நடப்பு கல்வியாண்டான 2017– 2018–ம் கல்வியாண்டில் 1–ம் வகுப்புக்கு மொத்தம் 583 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 80 பேர் மட்டுமே தேர்வாகி, மீதம் உள்ளோர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
ரூ.20 லட்சம்இதையறிந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து நாகர்கோவில் கேந்திர வித்யாலயா பள்ளியில் 1–ம் வகுப்புக்கு மேலும் இரு பிரிவுகளுக்கு (சி மற்றும் டி) அனுமதி வழங்க கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்தப் பள்ளியில் கட்டிட வசதி குறைவாக உள்ளதால் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் தொடங்க காலதாமதம் ஆகும் என்பதை கருத்தில் கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதகிருஷ்ணன் தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.
இத்தகவல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.