அனுமதி சான்று இன்றி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


அனுமதி சான்று இன்றி இயக்கப்பட்ட ஆம்னி பஸ் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 4 Jun 2017 4:15 AM IST (Updated: 4 Jun 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

அனுமதி சான்று இன்றி இயக்கப்பட்ட ஆம்னி பஸ்சை திருவாரூரில் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தார்.

திருவாரூர்,

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் தலைமையில், அதிகாரிகள் தனியார் ஆம்னி பஸ்களை திடீரென ஆய்வு செய்தனர். இதில் உரிய அனுமதி சான்று இன்றி இயக்கப்பட்ட ஒரு தனியார் ஆம்னி பஸ்சை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-

ஆம்னி பஸ் பறிமுதல்

போக்குவரத்து விதி முறைகள் முறையாக கடை பிடிக்கப்படுகின்றதா? என்பது குறித்து ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் தொண்டியில் இருந்து சென்னைக்கு சென்ற ஒரு தனியார் ஆம்னி பஸ்சிற்கு உரிய அனுமதி சான்று இல்லாமலும், வரி கட்டா மலும் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த ஆம்னி பஸ் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகளை மீறி இயக்கப்படும் தனியார் பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story