ரூ.1 கோடியே 16 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் அமைச்சர் தொடங்கி வைத்தார்
ரூ.1 கோடியே 16 லட்சத் தில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்,
கரூர் தாந்தோன்றி ஒன்றியம் ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சி சக்திநகரில் இருந்து 3-வது குறுக்குத்தெரு வரை மாநில சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 61 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கும், விசாக நகரில் சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் சாலை பலப்படுத்தும் பணிகளுக்கும் பூமி பூஜை நேற்று நடந்தது.
இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜைசெய்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
சாலை புதுப்பித்தல்
இதேபோல ஆண்டான்கோவில் மேற்கு ஊராட்சி வேப்பம்பாளையத்தில் மாநில சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் என்.எம்.ஜி. சாலை முதல் ஈரோடு- கரூர் சாலை வழியாக வேப்பம்பாளையம் வரை சாலை பலப்படுத்தும் பணிகளுக்கும், பாண்டியன் நகரில் பாண்டியன் நகர் முதல் நான்கு குறுக்கு தெரு வரை ரூ.19 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கும் பூமி பூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
கரூர் ஒன்றியம் ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில் செல்லரப்பாளையம் சாலை முதல் மாங்காசோளிப்பாளையம் வரை ரூ.4 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலை புதுப்பிக்கும் பணிகளுக்கும், புன்செய் கடம்பக்குறிச்சி ஊராட்சியில் பஸ் நிறுத்தம் முதல் பண்டுகாதன்புதூர் வரை பெரிய வள்ளிப்பாளையம் மற்றும் சின்ன வள்ளிப்பாளையம் வழியாக செல்லும் சாலையினை ரூ.18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகளுக்கும் பூமி பூஜை செய்து வைத்து பணிகளை தொடங்கி வைத்தார்.
கால்நடை கூடுதல் மருந்தக கட்டிடம்
மேலும் அருமைக்காரன் புதூர் முதல் பெரிய வள்ளிப்பாளையம் வழியாக சின்ன வள்ளிப்பாளையம் வரை ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கும், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் பால்ராஜபுரம் ஊராட்சி ஆண்டிப்பாளையத்தில் ரூ.23 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடை கூடுதல் மருந்தக புதிய கட்டிட பணிகளுக்கும் பூமி பூஜை செய்து வைத்து பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பணிகள் உரிய காலத்திற்குள் முடிக்கப்பட்டு விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அவர் தெரிவித்தார். தாந்தோன்றி, கரூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய ஒன்றிய பகுதிகளில் மொத்தம் ரூ.1 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து வைத்து தொடங்கி வைத்தார். இதில் கீதா எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர்கள் தங்கமுத்து (பொதுப்பணித்துறை), சடையப்பன் (ஊரக வளர்ச்சித்துறை), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் மற்றும் அதிகாரிகள், அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story