நெடுவாசல் பொதுமக்கள் 53-வது நாளாக போராட்டம்


நெடுவாசல் பொதுமக்கள் 53-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2017 4:30 AM IST (Updated: 4 Jun 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பொதுமக்கள் 53-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பங்கேற்றார்.

வடகாடு,

வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாசலில் அப்பகுதி மக்கள் 2-வது கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

53-வது நாளாக போராட்டம்

இந்தநிலையில், நெடுவாசலில் 53-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், திட்டத்துக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் பங்கேற்றார்.

பெரிய அளவில் போராட்டம்

தொடர்ந்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெடுவாசல் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக்குழு முழு ஆதரவு கொடுத்து வருகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது. ஆனால் இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்து கொள்ளாமல் தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மவுனம் காத்துவருகிறது.

மெரினாவில், திருமுருகன் காந்தி, மீத்தேன் எதிர்ப்பு இயக்க ஜெயராமன் உள்பட 11 பேரையும் கைது செய்திருப்பது வருத்தமளிக்கிறது. நெடுவாசலில் போலீசாரை குவித்து திட்டத்தை நிறைவேற்ற சதி நடக்கிறது. அதனால், அதிகளவில் மக்களை திரட்டி பெரியளவில் போராட்டம் நடத்தவேண்டும்.

இவ்வாறு அவர் கூறி னார்.


Next Story