டாஸ்மாக் கடையை மூடக்கோரி 3–வது நாளாக பொதுமக்கள் நூதன போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி 3–வது நாளாக பொதுமக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2017 3:55 AM IST (Updated: 4 Jun 2017 3:55 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே, திப்பணம்பட்டியில் டாஸ்மாக் டையை மூடக்கோரி பொதுமக்கள் 3–வது நாளாக மதுபாட்டில்களுக்கு பாடைகட்டி ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் ஆவுடையானூர் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கடந்த ஜனவரி மற்றும் மே மாதம் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் பஸ் மறியல், கடை முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தினர். ஆனால் இது வரை அந்த மதுக்கடை மூடப்படவில்லை.குடிமகன்கள் அதிகரிப்பு

தற்போது பாவூர்சத்திரம் சுற்று பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டு விட்டதால் இந்த கடைக்கு குடிமகன்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது, இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அந்த பகுதியில் பள்ளிக்கு செல்லும் மாவண–வமாணவிகள், அருகில் உள்ள பீடிகடைக்கு வரும் பெண்கள், கிறிஸ்தவ ஆலயத்திற்கு வருபவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

பாடைகட்டி...

இந்த கடையை முற்றிலும் அகற்றக்கோரி திப்பணம்பட்டி, கொண்டலூர், பூவனூர், மலையராமபுரம், போன்ற சுற்று பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடை அருகில் பந்தல் அமைத்தும், சமையல் செய்து சாப்பிட்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3 வது நாளாக மதுபாட்டிலுக்கு பாடைகட்டி, ஒப்பாரி வைத்தும் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story