ஹலகூர் பகுதியில், மரங்கள் வளர்க்கும் திட்டம் முதற்கட்டமாக 10 ஆயிரம் விதைகள் தூவப்பட்டன


ஹலகூர் பகுதியில், மரங்கள் வளர்க்கும் திட்டம் முதற்கட்டமாக 10 ஆயிரம் விதைகள் தூவப்பட்டன
x
தினத்தந்தி 4 Jun 2017 4:22 AM IST (Updated: 4 Jun 2017 4:22 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா மாவட்டம் ஹலகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 10 லட்சம் விதைகள் தூவி மரங்கள் மற்றும் செடி–கொடிகள் வளர்க்க திட்டமிடப்பட்டது.

ஹலகூர்,

மண்டியா மாவட்டம் ஹலகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 10 லட்சம் விதைகள் தூவி மரங்கள் மற்றும் செடி–கொடிகள் வளர்க்க திட்டமிடப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு அமைப்பின் தலைவர் அஸ்வின் குமார் தலைமை தாங்கினார். விழாவில் கன்னட திரைப்பட நடிகர் பாலனாகேந்தர், நடிகை திவ்யா மற்றும் ‘ஹுலிராய‘ எனும் கன்னட திரைப்படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினரும், தன்னார்வலர்களும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் முதற்கட்டமாக ஹலகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் விதைகளை தூவினர். இந்த விழாவில் சுற்றுச்சூழல் அமைப்பின் நிர்வாகிகள் சிவமல்லயா, தடமஹள்ளி உமேஷ், கெம்பையனதொட்டி பரமேஷ், ரமேஷ், கரலகட்டே சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story