மாநிலத்தில் பல்வேறு பகுதியில் மின்னல் தாக்கி 10 பேர் பலி


மாநிலத்தில் பல்வேறு பகுதியில் மின்னல் தாக்கி 10 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jun 2017 4:47 AM IST (Updated: 4 Jun 2017 4:46 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தின் பல்வேறு பகுதியில் மின்னல் தாக்கி 10 பேர் பலி ஆகி உள்ளனர்.

மும்பை,

மாநிலத்தின் பல்வேறு பகுதியில் மின்னல் தாக்கி 10 பேர் பலி ஆகி உள்ளனர்.

மின்னல் தாக்கி 10 பேர் பலி

மராட்டியத்தில் மும்பை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதில் பல இடங்களில் மின்னல் தாக்கி 10 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 4 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. அதன் விவரம் வருமாறு:–

யவத்மால் மாவட்டம், ராலேகாவ் தாலுகாவை சேர்ந்தவர் வாசுதேவ் (வயது 58). இவர் நேற்று முன் தினம் வயலில் வேலைப்பார்த்து கொண்டு இருந்த போது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதே தாலுகா வால்ஹா கிராமத்தை சேர்ந்த விவசாயி ஹனுமன் பாவுராவ் (56) மின்னல் தாக்கி பலியானார். இதேபோல் வார்தா மாவட்டம் தேவ்டா பகுதியில் மாடு மேய்த்து கொண்டு இருந்த வசந்தா, உகன்ராவ் ஆகியோர் மின்னல் தாக்கி பலியானார்கள்.

மாடுகள் பலி

அமராவதி மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலியானார்கள். மேலும் புல்தானாவில் வயலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ருக்மணி என்ற பெண் மின்னல் தாக்கி பலியானார். அப்போது அவரின் அருகில் நின்று கொண்டு இருந்த 4 மாடுகளும் பலியாகின.

துலே மாவட்டம் சாக்ரி தாலுகாவில் ஜூன்காபாய் (65), கங்கா (55) ஆகிய 2 பேர் மின்னல் தாக்கி பலியானார்கள். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story