ஈரோட்டில் நாளை கொ.ம.தே.க. சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்


ஈரோட்டில் நாளை கொ.ம.தே.க. சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:00 AM IST (Updated: 5 Jun 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

ஈரோடு,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நதிநீர் இணைப்பு மாநாடு ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி மைதானத்தில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த மாநாட்டுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்குகிறார். மாநில தலைவர் திருச்சி தேவராஜன், அவைத்தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பன், பொருளாளர் கே.கே.சி.பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொன்னுவேல் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்

மாநாட்டில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகிறார்.

இதில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, காங்கேயம் சேனாபதி கால்நடை ஆராய்ச்சி மைய செயலாளர் கார்த்திகேய சேனாபதி ஆகியோர் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள்.

விழாவில் மாநாட்டு குழு தலைவர் துரைராஜா, செயலாளர் சாமிநாதன், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, துணைத்தலைவர்கள் ஜெகநாதன், சிவராஜ், துணை செயலாளர்கள் பிரபாகரன், முத்துசாமி உள்பட தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்பட கூட்டணி கட்சியினர், விவசாயிகள் மற்றும் ஏராளமானவர்கள் கலந்துகொள்கிறார்கள்.


Next Story