வடுவூர் ஏரியை தூர்வார ரூ.5 கோடியில் திட்டம் கலெக்டர் தகவல்
வடுவூர் ஏரியை தூர்வார ரூ.5 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
வடுவூர்,
திருவாருர் மாவட்டத்தில் உள்ள வடுவூர் ஏரியை உடனடியாக தூர்வார் வார வலியுறுத்தி வடுவூர் வளர்ச்சி குழுவினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் வடுவூர் ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வடுவூர் ஏரியை தூர்வார பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கரையில் இருந்து 50 மீட்டர் தொலைவினை ஒதுக்கிவிட்டு தூர்வாரவும், ஏரியின் மொத்த பரப்பளவில் 80 சதவீத பகுதியில் தூர்வாரும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏரி அரை மீட்டர் முதல் 1½ மீட்டர் ஆழம் வரை தூர்வாரப்படும்.
ரூ.3 கோடியில் பூங்கா...
அதற்கு முன் அரசின் அனுமதி பெற்று ஊர் பொதுமக்கள் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்படும். விரைவில் தூர்வாரும் பணிக்கான அரசாணை வந்த உடன் பணிகள் தொடக்கப்படும். தூர்வாரும் பணி முடிந்ததும், ரூ.3 கோடி செலவில் வடுவூர் ஏரி பூங்கா அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கலெக்டரிடம் வடுவூர் வளர்ச்சிகுழுவினர் மற்றும் பொதுமக்கள் வடுவூர் ஏரியை உடனடியாக தூர்வார வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

Related Tags :
Next Story