ஆணுக்கும்- ஆணுக்கும் திருமணம் செய்து வைத்து நூதன போராட்டம்


ஆணுக்கும்- ஆணுக்கும் திருமணம் செய்து வைத்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 5 Jun 2017 4:30 AM IST (Updated: 5 Jun 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஆணுக்கும்- ஆணுக்கும் திருமணம் செய்து வைத்து நூதன போராட்டம்

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை நிரந்தரமாக மூடக்கோரி திப்பணம்பட்டி, கொண்டலூர், பூவனூர், ஆரியங்காவூர், நாட்டார்பட்டி, மலையராமபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தொடார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் நூதன போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்று 4-வது நாளான நடந்தது. நேற்று போராட்டக்காரர்கள் ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் நடத்தி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். வரும் காலங்களில் மது அருந்தும் ஆண்களுக்கு பெண் கிடைப்பது அரிது என்பதை தெரிவிக்கும் விதமாக ஆணுக்கும், ஆணுக்கும் திருமணம் நடத்தி வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்காக வழக்கமாக வீடுகளில் திருமணம் நடத்துவதை போல் பந்தல், மற்றும் மணமேடை அமைத்து, அலங்காரம் செய்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஆண் ஒருவர், மற்றொரு ஆணுக்கும் தாலி கட்டியும், மாலை மாற்றியும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நூதன போராட்டத்தில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். டாஸ்மாக் கடை மூடப்படும் வரை போராட்டம் தொடர்ந்து நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story