குடிநீர், கல்வி, மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் கலெக்டர் பேட்டி
பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர், கல்வி, மகளிர் மேம்பாட்டு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற பெண் கலெக்டர் சாந்தா கூறினார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக இதுவரை பணிபுரிந்த நந்தகுமார் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு பணிமாற்றலாகி சென்றார். அவருக்கு பதிலாக பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக வே.சாந்தா நேற்று பொறுப்பேற்றார். பணிமாற்றலாகி சென்ற முந்தைய கலெக்டர் நந்த குமார், புதிய கலெக்டரிடம் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய கலெக்டர் வே.சாந்தா, பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டர் ஆகும். இவர் 1997-ல் துணை கலெக்டராக அரசுப்பணியில் சேர்ந்தார். அதன்பின் நீலகிரி மாவட்டம் கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஆகவும், கோபிசெட்டிப்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆகவும் பணிபுரிந்தார்.
பின்பு பதவி உயர்வுபெற்று தமிழ்நாடு உணவுப்பொருள் வினியோக நிறுவனத்தின் சென்னை வடக்கு மண்டல முதுநிலை மேலாளர் ஆகவும், 2005 முதல் 2007-ம் ஆண்டு வரை ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் பணிபுரிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கோவை மாநகர துணை ஆணையராகவும் பணிபுரிந்துள்ளார். அதன்பின்பு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மேலாண்மை இயக்குனர்-தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முதன்மை செயல்அலுவலராகவும் பணிபுரிந்து அங்கிருந்து பணிமாற்றலாகி பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பு ஏற்றுள்ளார்.
குடிநீர், கல்விக்கு முன்னுரிமை
பெரம்பலூர் மாவட்ட புதிய கலெக்டராக வே.சாந்தா பதவி ஏற்றார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் பெண் கலெக்டராக பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் திட்டங்கள் முனைப்பாக செயல்படுத்தப்படும். மக்களின் அடிப்படை தேவைகளான கல்வி, சுகாதாரம், குடிநீர் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து பணிகள் செயல்படுத்தப்படும்.
இம்மாவட்டத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக அவர்களது திறன்மேம்பாட்டில் தனிகவனம் செலுத்தப்பட்டு பெண்களின் வாழ்வாதாரம் மேம்படுவற்கான அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படும். முந்தைய கலெக்டர் விட்டுச்சென்ற சுற்றுச்சூழல் பராமரிப்பு, நீர்நிலைகள் மேம்பாடு, விளையாட்டுத்துறை வளர்ச்சி ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாழ்த்து
புதிய கலெக்டருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மனோகரன், சுகாதார துணை இயக்குனர் டாக்டர் சம்பத், வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி பாவேந்தன் மற்றும் கலெக்டர் அலுவலக அனைத்து துறைகளின் அலுவலர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story