விவசாயிகள் போராட்ட விவகாரம் முதல்–மந்திரியின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது
விவசாயிகள் போராட்டம் குறித்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது என சரத்பவார் கூறியிருக்கிறார்.
மும்பை,
விவசாயிகள் போராட்டம் குறித்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியிருக்கிறார்.
விவசாயிகள் போராட்டம்மராட்டியத்தில் கடும் வறட்சி காரணமாகவும், பருவம் தவறிய மழை காரணமாகவும் கடன் சுமையில் சிக்கி விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கதைகாக உள்ளது.
எனவே விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் என பா.ஜனதா தலைமையிலான அட்சிக்கு எதிர்கட்சிகளும், சிவசேனாவும் கடும் நெருக்கடி கொடுத்துவந்தன. இருப்பினும் அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுத்துவிட்டது.
இந்த நிலையில் கடன் தள்ளுபடி கோரி அரசு எதிராக கடந்த 1–ந் தேதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினார்.
முதல்–மந்திரி அறிவிப்புநகர் பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்படும் காய்கறி விளைபொருட்களை தடுத்துநிறுத்தியும், பால் பொருட்களை சாலையில் கொட்டியும் அரசுக்கு தங்கள் எதிர்பை வெளிப்படுத்தினர்.
இதனால் நகர் பகுதிகளில் காய்கறி, பால்பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது.
இதையடுத்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட முதல்–மந்திரி விவசாய அமைப்பினை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் விவசாயிகளின் கோரிக்கைகளின் 80 சதவீதம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அப்போது விவசாயிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கட்சியின் பேரை குறிப்பிடாமல் ‘‘ சிலர் விவசாயிகளை தூண்டிவிட்டு நாட்டில் பிரச்சினை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்’’ என தெரிவித்தார்.
சரத்பவார்முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசின் இந்த பேச்சு குறித்து தேசியவாதகாங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கூறியதாவது:–
விவசாயிகளின் பேராட்டத்தில் எந்த ஒரு கட்சியும் கலந்துகொள்ளவில்லை. விவசாயிகள் போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூச எந்த முகாந்திரமும் இல்லை. முதல்–மந்திரியின் பேச்சு குழந்தைத்தனமாக உள்ளது.
அரசு விவசாயிகளின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தான் இந்த போராட்டமே வெடித்துள்ளது. ஒரு முதல்–மந்திரி இவ்வாறு பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.