கால்வாயில் சொகுசு கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம்
குளச்சலில் கால்வாயில் சொகுசு கார் கவிழ்ந்து 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
குளச்சல்,
ரீத்தாபுரத்தில் இருந்து குளச்சல் நோக்கி நேற்று அதிகாலை 2 மணியளவில் ஒரு சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரை கேரள மாநிலம் ஆலன்கோடு, தோட்டைகாட்டை சேர்ந்த நவாஸ் (வயது 40) என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சிபு (43), சசி (36) ஆகியோர் உடனிருந்தனர். அந்த கார் களிமார் பகுதியில் பாம்பூரி கால்வாய் பாலம் அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் கார் கால்வாய்க்குள் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேரும் படுகாயம் அடைந்து சத்தம் போட்டனர்.
3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
அவர்களது சத்தம் கேட்டு பக்கத்தில் உள்ள ஐஸ் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 3 பேரையும் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து நடந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் கால்வாயில் கவிழ்ந்து கிடந்த காரையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related Tags :
Next Story