பெண் குழந்தைகள் சாவில் மர்மம் நீங்கியது பெற்றெடுத்த தாயே மூச்சை திணறடித்து கொன்றது அம்பலம்
நாகர்கோவில் இரட்டை பச்சிளம் பெண் குழந்தைகள் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆண் குழந்தை மீதான ஆசையில் பெற்றெடுத்த தாயே இரட்டை குழந்தைகளை கொன்றிருப்பது அம்பலமாகி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அந்த பெண் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடித்தட்டு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 39). இவர் ஒழுகினசேரியில் உள்ள மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி திவ்யா (29). எம்.எஸ்சி. பி.எட். படித்துள்ளார். இவர்களுக்கு அனுஷ்கா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த திவ்யாவுக்கு கடந்த 22-ந் தேதி நாகர்கோவிலில் ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவம் நடந்து இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
அதன் பிறகு திவ்யா குழந்தைகளுடன் கண்ணங்குளத்தில் உள்ள தன்னுடைய தாயார் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரட்டை பச்சிளம் பெண் குழந்தைகளும் திடீரென இறந்தன. தாய்ப்பால் குடித்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக குடும்பத்தினரிடம் திவ்யா கூறினார்.
தாயார் சிக்கினார்
ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளும் எப்படி இறந்திருக்க முடியும்? என்ற சந்தேகம் எழுந்ததால் அதுபற்றி போலீசாருக்கும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்தன.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, காற்றாடித்தட்டில் உள்ள திவ்யாவின் வீட்டு வளாகத்தில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்களை தோண்டி எடுத்து நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு மீண்டும் அதே இடத்தில் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டன.
தாய்ப்பால் குடித்ததால் குழந்தைகள் மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக அதுவரை கூறி வந்த இளம்பெண் திவ்யா, போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணைக்கு பின்னர் தற்போது சிக்கி உள்ளார்.
ஈவு இரக்கமின்றி கொலை
ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு இருந்த நிலையில், இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் ஈவு இரக்கமின்றி தாயே அந்த பச்சிளம் குழந்தைகளை சாகடித்த கொடூரம் தற்போது அம்பலமாகி உள்ளது.
தாய்ப்பால் கொடுத்த போது குழந்தைகளை மார்போடு இறுக்கி அணைத்து மூச்சை திணறடித்து சாகடித்ததாக அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பரபரப்பு வாக்குமூலம்
அவர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
என் கணவர் கண்ணனுக்கு 4 சகோதரர்கள் உள்ளனர். இவர்களில் 3 பேருக்கு பெண் குழந்தைகளே உள்ளனர். ஒருவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தன்னுடைய சகோதரர்கள் அனைவருக்கும் பெண் குழந்தைகள் பிறந்ததால் ஆண் வாரிசுகளே இல்லை என்று என் கணவரின் குடும்பத்தினர் வருத்தப்பட்டனர். நான் முதலில் கர்ப்பமடைந்த போது எனக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பெண் குழந்தை பிறந்தது.
பெண் குழந்தையை நான் பெற்றெடுத்ததால் எனக்கும், என் கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது. கணவரின் உறவினர்களும் என்னிடம் வெறுப்புடனேயே பழகினார்கள். இந்த நிலையில் நான் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்தேன். 2-வது முறை கர்ப்பிணியாக இருந்தபோது வயிறு முன்பைவிட பெரியதாக காணப்பட்டது. இதனால் ஆண் குழந்தைதான் பிறக்கப்போகிறது என்று நினைத்து நானும், என் கணவரும் மகிழ்ச்சி அடைந்தோம்.
நாடகம் ஆடினேன்...
இம்முறையும் நாங்கள் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. இரட்டை பெண் குழந்தைகளாக பிறந்தன. இது எனக்கு மகிழ்ச்சியை தரவில்லை. எனினும் அதனை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பேசினேன். ஆனால் மீண்டும் எனக்கு பெண் குழந்தைகளாக பிறந்ததால் என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழ்வாரோ, மாட்டாரோ என்ற அச்சம் எனக்குள் வந்து விட்டது. பிரசவம் நடந்த பின்னர் என் கணவரும் என்னிடம் சரியாக பேசவில்லை.
இதனால் மனதை கல்லாக்கிக் கொண்டு, பச்சிளம் குழந்தைகள் என்று பாராமல் பெற்றெடுத்த நானே தாய்ப்பால் ஊட்டும் போது மார்போடு, மார்பாக அணைத்து, மூச்சைத் திணறடித்து கொலை செய்தேன். அக்கம் பக்கத்தினர் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக தாய்ப்பால் ஊட்டியபோது மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி நாடகம் ஆடினேன்.
என் குழந்தைகளின் சாவில் சந்தேகம் அடைந்த போலீசாரும், அதிகாரிகளும் விசாரித்தபோது சற்று அச்சம் ஏற்பட்டது. உடல்களை பிரேத பரிசோதனை செய்து முடித்த சிறிது நேரத்தில் தாயிடம் நன்றாக விசாரணை நடத்துங்கள் என்று டாக்டர் கூறினார். இதைக்கேட்ட நான் மிகவும் பதற்றம் அடைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.
இவ்வாறு வாக்குமூலத்தில் திவ்யா கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதே நேரத்தில் இரட்டைக் குழந்தைகள் கொலையில் திவ்யாவுக்கு மட்டும்தான் சம்பந்தம் இருக்கிறதா? அவரது குடும்பத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
மர்மம் நீங்கியது
பச்சிளம் இரட்டை பெண் குழந்தைகள் சாவு குறித்து நாகர்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதில் உள்ள மர்மம் நீங்கி, குழந்தைகளை கொன்றது தாய்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளார்கள். தாய் கைது செய்யப்பட்ட சம்பவமும் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.

Related Tags :
Next Story