அரியலூர் நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்

அரியலூர்,
அரியலூர் நகராட்சிக்கு புதியதாக நகராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு, வாரச்சந்தை இடைவெளி நிரப்பும் திட்டம் 2016-17-ன் கீழ் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டிட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சந்திரகாசி எம்.பி., மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தனசேகரன் முன்னிலை வகித்தனர். இப்பணிகள் குறித்த திட்டகாலத்தின் அடிப்படையில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும், கட்டுமான நிறுவனத்திற்கும் கலெக்டர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பிளாஸ்டிக் இல்லா நகராட்சியாக மாற்றிட திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலத்தை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், அரியலூர் கோட்டாட்சியர் மோகனராஜன், அரியலூர் நகராட்சி ஆணையர் வினோத், வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story