சேலம் அருகே பரபரப்பு சம்பவம்: பஸ்சில் 15 வயது சிறுமி கற்பழிப்பு கண்டக்டர்-2 டிரைவர்கள் கைது
சேலம் அருகே பஸ்சில் 15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டாள். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த பஸ்சின் கண்டக்டர், 2 டிரைவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓமலூர்,
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஓமலூர் அருகே உள்ள நாரணம்பாளையம் கிராமத்துக்கு தினமும் ஒரு தனியார் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கடைசி முறையாக இரவு 8.15 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணியளவில் நாரணம்பாளையத்துக்கு செல்வது வழக்கம். பின்னர் அங்கேயே பஸ்சை நிறுத்திவிட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சேலத்துக்கு இயக்குவார்கள்.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அந்த தனியார் பஸ் புறப்பட்டது. பஸ்சை டிரைவரான சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் மணிவண்ணன் (வயது 31) ஓட்டினார். கண்டக்டராக வாழப்பாடி முத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் பெருமாள் (22) இருந்தார். மேலும், மாற்று டிரைவரான சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் முருகனும் (35) இருந்தார்.
15 வயது சிறுமி
அந்த பஸ்சில் 15 வயது சிறுமி உள்பட சில பயணிகளே இருந்தனர். அங்கிருந்து புறப்பட்ட பஸ், வின்சென்ட், அஸ்தம்பட்டி, 5 ரோடு, ஜங்ஷன், மாமாங்கம், கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி வழியாக இரவு 9 மணியளவில் நாரணம்பாளையத்தை வந்தடைந்தது. அங்கு பஸ்சில் இருந்து பயணிகள் கீழே இறங்கிச்சென்றனர்.
ஆனால், அந்த சிறுமி மட்டும் கீழே இறங்கவில்லை. சிறிது நேரத்துக்குப்பின் சிறுமி பஸ்சில் இருந்து கீழே இறங்கி, ‘என்னை காப்பாற்றுங்கள்; காப்பாற்றுங்கள்’ என்று கூச்சலிட்டப்படி ஓடினாள். சத்தம் கேட்டு அந்த கிராமமக்கள் திரண்டு வந்து சிறுமியிடம் விவரம் கேட்டனர். அப்போது அந்த சிறுமி நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டாள்.
கற்பழிப்பு
பஸ்சில் வைத்து தன்னை கண்டக்டரும், டிரைவர்களும் கற்பழித்து விட்டதாக கூறி கதறினாள். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஓடிச்சென்று கண்டக்டர் பெருமாள், டிரைவர்கள் மணிவண்ணன், முருகன் ஆகிய 3 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவர்களை ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அங்கு ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், ரஜினிகாந்த் ஆகியோர் பிடிபட்ட 3 பேரிடமும், அந்த சிறுமியிடமும் விசாரணை நடத்தினார்கள். இதில், சேலம் அழகாபுரத்தை சேர்ந்த 15 வயதுடைய அந்த சிறுமி 9-ம் வகுப்பு வரை படித்துள்ளாள். இவள் தனது பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிடுவது வழக்கம். அதன்பின்னர் உறவினர்கள் அவளை அழைத்து வந்து வீட்டில் விட்டுச்செல்வார்கள். சில நேரங்களில் அவளாகவே வீடு திரும்பிவிடுவாள்.
கண்டக்டரிடம் அறிமுகம்
இதேபோல் கடந்த 3-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய அந்த சிறுமி சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு வந்து பஸ் ஏறி ஜங்ஷன் பகுதிக்கு சென்றாள். அன்று இரவு ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தங்கிக்கொண்டாள். மறுநாள் தனது வீட்டிற்கு திரும்பி வந்துள்ளாள். பின்னர் நேற்று முன்தினம் மதியம் மீண்டும் பஸ் ஏறி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்தாள். அங்கிருந்த தனது நண்பர் விஜயன் என்பவருடன், ஜங்ஷன் வந்த இந்த தனியார் பஸ்சில் ஏறினாள்.
அப்போது பஸ் கண்டக்டர் பெருமாளிடம் அந்த சிறுமியை விஜயன் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அந்த பஸ்சிலேயே இரவு வரை டிரைவர், கண்டக்டரிடம் பேசிக்கொண்டு அவள் பயணம் செய்துள்ளாள். இரவு 8.15 மணிக்கு சேலம் பழைய பஸ் நிலையத்துக்கு பஸ் வந்தவுடன் அந்த சிறுமி கீழே இறங்க முயன்றுள்ளாள்.
பஸ் பறிமுதல்
ஆனால், கண்டக்டர் பெருமாள், மாற்று டிரைவர் முருகன் ஆகியோர் கீழே இறங்க விடாமல் தடுத்துள்ளனர். பின்னர் பேசிக்கொண்டே அவளை இரவு 9 மணியளவில் அதே பஸ்சில் நாரணம்பாளையத்துக்கு அழைத்து வந்தனர். அங்கும் அந்த சிறுமியை கீழே இறங்க விடாமல் தடுத்து மிரட்டி உள்ளனர்.
மற்ற பயணிகள் அனைவரும் கீழே இறங்கி அவர்களின் வீடுகளுக்கு சென்றதை உறுதி செய்த 3 பேரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
3 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் நேற்று மாலை 4 மணியளவில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்த சிறுமியிடம் அவர் நேரடி விசாரணை மேற்கொண்டார். பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சை பார்வையிட்ட அவர், சம்பவம் நடந்த இடத்துக்கும் சென்று விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் பஸ்சில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதற்கிடையே, சிறுமியின் தாய் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது மகள் கற்பழிக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில், மைனர் பெண்ணை கடத்துவது (366 (ஏ), அடைத்து வைத்தல் (342), மைனர் பெண்ணை கற்பழித்தல் (376டி), கொலை மிரட்டல் விடுத்தல் (506/1), கூட்டாக கற்பழித்தல் (போஸ்கோ 5(9), 6) உள்பட 9 பிரிவுகளின்கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் பெருமாள், டிரைவர்கள் மணிவண்ணன், முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சேலம் அருகே பஸ்சில் வைத்து 3 பேர் சேர்ந்து 15 வயது சிறுமியை கற்பழித்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story