கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் சிலம்புடன் மனு கொடுக்க வந்த பெண்

மதுரை செல்லூர் சுயராஜ்யபுரத்தை சேர்ந்தவர் ஸ்டெல்லா பேபி என்ற கோமதி (வயது 28).
மதுரை,
மதுரை செல்லூர் சுயராஜ்யபுரத்தை சேர்ந்தவர் ஸ்டெல்லா பேபி என்ற கோமதி (வயது 28). மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று இவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கையில் கால் சிலம்புடன் வந்தார். பின்னர் அவர், மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், நானும் கோவலன் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரும் காதலித்து வந்தோம். திருமணம் செய்தவதாக கூறிய அவர், என்னை 2 முறை கர்ப்பமாக்கினார். ஆனால் கூறியது போல் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதுகுறித்து நான் கேட்டபோது கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். எனவே எனக்கு பாதுகாப்பு அளித்து அவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Related Tags :
Next Story