கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு விலையில்லா பாடப்புத்தகங்கள், வழங்கப்பட்டன
திருச்சி மாவட்டத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் அரசு, மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என அனைத்து வகையிலும் சேர்த்து 225 பள்ளிகள் உள்ளன. கோடை விடுமுறை முடிந்து நேற்று காலை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பையொட்டி திருச்சி மேலப்புதூர், தில்லைநகர், பாலக்கரை, மெயின்கார்டு கேட் உள்ளிட்ட பள்ளிகள் அதிகம் உள்ள பகுதிகள் நேற்று காலை பரபரப்புடன் காணப்பட்டன. மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் சீருடை அணிந்து பள்ளிகளுக்கு சென்றனர்.
அடம் பிடித்த குழந்தைகள்
சில மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 மாணவிகளுக்கு பிளஸ்-2 மாணவிகள் மலர்கள் கொடுத்து வரவேற்றனர். விடுதிகளுடன் கூடிய பள்ளிகளில் மாணவிகள் பெட்டி படுக்கையுடன் பெற்றோருடன் வந்தனர். மழலையர் பள்ளிகளில் பள்ளி செல்ல மறுத்து குழந்தைகள் அடம் பிடித்து அழுதனர். அவர்களை பெற்றோர் சமாதானம் செய்து பள்ளிக்குள் அனுப்பி வைத்தனர். தமிழக அரசு புதிதாக பிறப்பித்த உத்தரவின்படி நேற்று அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக காலை இறைவணக்கம் பாடப்பட்டது.
கலெக்டர் தொடங்கி வைத்தார்
மண்ணச்சநல்லூர் ஒன்றியம் சிறுகனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் குறிப்பேடுகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி இதனை வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவியாக விலையில்லா மிதிவண்டிகள், பேருந்து பயண சலுகை அட்டைகள் 14 வகையான கல்வி உபகரணங்கள், விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகள் அரசு வழங்கி வரும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு அதிக மதிப்பெண் எடுத்து படிக்கின்ற பள்ளிக்கு பெருமை சேர்ப்பதோடு தங்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் கல்வி போதிப்பது மட்்டுமல்லாது பள்ளிக் குழந்தைகளை சுற்றியுள்ள சிரமங்களையும், குறைகளையும் எடுத்துச் சொல்லி எவ்வாறு அவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத்தர வேண்டும். அப்போது தான் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் சிறப்பாக அமையும். வருகின்ற கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் என அறிவிக்கப்பட்டு தேதிகளும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு சதவீத தேர்ச்சி பெறுவதற்கு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் தங்களை பணியில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புத்தகங்கள், சீருடைகள்
மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3 லட்சத்து 13 ஆயிரத்து 131 மாணவ, மாணவிகளுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 3 ஆயிரத்து 941 மாணவ, மாணவிகளுக்கும் நேற்று பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதே போல் 1-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்பு வரை சத்துணவு பயிலும் 49 ஆயிரத்து 249 மாணவ, மாணவிகளுக்கு முதல் செட் சீருடைகள் வழங்கப்பட்டது. 1 லட்சத்து 33 ஆயிரத்து 743 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடகுறிப்பேடுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ், முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜுலு, மாவட்ட கல்வி அதிகாரி காமினிதேவி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Related Tags :
Next Story