தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு தூக்கு மாட்டி பெண்கள் நூதன போராட்டம் சாலைமறியல் செய்ததால் போக்குவரத்து பாதிப்பு
தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு தூக்குமாட்டி பெண்கள் நூதன போராட்டம் நடத்தினார்கள். மேலும் சாலை மறியல் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சின்னியகவுண்டம்பாளையம் தாராபுரம் அருகே உள்ளது சின்னியகவுண்டன்பாளையம் கிராமம். இங்கு 300–க்கும்
தாராபுரம்,
தாராபுரம் அருகே குடிநீர் கேட்டு தூக்குமாட்டி பெண்கள் நூதன போராட்டம் நடத்தினார்கள். மேலும் சாலை மறியல் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சின்னியகவுண்டம்பாளையம்தாராபுரம் அருகே உள்ளது சின்னியகவுண்டன்பாளையம் கிராமம். இங்கு 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்துக்கு அமராவதி ஆற்றிலிருந்து சுண்ணாம்புக்காடு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாததால் கடந்த 2 மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கிராமத்திற்கு ஏற்கனவே ஊராட்சி மூலமாக 2 ஆழ்குழாய் கிணறுகள் அமைத்துத் தரப்பட்டுள்ளது. இது தவிர ஒரு பொது கிணறும் உள்ளது.
குடிநீர் பற்றாக்குறைவறட்சியின் காரணமாக இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால், ஆழ்குழாய் கிணற்றிலும், பொது கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டது. இதனால் இந்த பகுதியில் தற்போது கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு மாதமாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இதுபற்றி அந்த கிராம மக்கள் அதிகாரிகளை சந்தித்து குடிநீர் கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று சின்னியகவுண்டன்பாளையம் பிரிவு அருகே காலிக்குடங்களுடன் திரண்டனர்.
சாலை மறியல்அங்கு அவர்கள் தாராபுரத்திலிருந்து பூளவாடி செல்லும் சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது சில பெண்கள் தங்கள் கழுத்தில் கயிற்றால் தூக்குமாட்டிக்கொண்டு நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் உடனடியாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கூறியதாவது:–
தூக்கு மாட்டி போராட்டம்கடந்த ஒரு மாதமாக குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். அருகே உள்ள கிராமங்களிலும் இதே நிலை நீடிப்பதால், குடிநீரை தேடி எங்கும் செல்ல முடியாத நிலை உருவாகி விட்டது. கேன் தண்ணீரை ரூ.50 கொடுத்து விலைக்கு வாங்கி வந்து உபயோகித்து வருகிறோம். ஒரு நாளைக்கு 5 கேன் தண்ணீர் தேவைப்படுகிறது. இங்கு உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள். நாள்தோறும் குடிநீரை விலை கொடுத்து வாங்கி எங்களால் உபயோகிக்க முடியாது.
அதிகாரிகளிடம் இதுபற்றி பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பொது கிணற்றை தூர்வார வேண்டும். தற்போது ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்த வேண்டும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தரவேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டோம். அப்போது அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக, நாங்கள் தூக்குமாட்டிக் கொள்ளும் நூதன போராட்டத்தை நடத்தினோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.