மூங்கில்துறைப்பட்டு அருகே திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தூக்குப்போட்டு சாவு


மூங்கில்துறைப்பட்டு அருகே திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 8 Jun 2017 3:30 AM IST (Updated: 8 Jun 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் உள்பட 2 பேர் கைது

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி. கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் அம்மு(வயது 17). 10–ம் வகுப்பு படித்து முடித்துள்ள இவர் பிரம்மகுண்டத்தில் உள்ள தனது பாட்டியுடன் வசித்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த உறவினரான பரசுராமன் மகன் கதிர்வேல்(22) என்பவரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கதிர்வேல், வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அம்மு, கதிர்வேலின் வீட்டுக்கு சென்று, தன்னை திருமணம் செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த கதிர்வேல், தாய் சாந்தியுடன் சேர்ந்து கொண்டு அம்முவை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த அம்மு, தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அம்முவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story