கறி விருந்தில் தகராறு: இருதரப்பினர் இடையே மோதல்; 5 பேர் கைது


கறி விருந்தில் தகராறு: இருதரப்பினர் இடையே மோதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jun 2017 3:45 AM IST (Updated: 9 Jun 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே கறி விருந்தில் நடந்த தகராறில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

கொரடாச்சேரி அருகே உள்ள வெள்ளக்குடியை சேர்ந்தவர் செந்தில். சம்பவத்தன்று இவருடைய வீட்டில் திருமண நிகழ்ச்சியில் கறி விருந்து நடைபெற்றது. இதில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது44) என்பவர் கலந்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது கறி கொஞ்சம் கூடுதலாக வைக்குமாறு கேட்டுள்ளார். இதில் அவருக்கும், பந்தி பரிமாறிய சேந்தமங்கலத்தை சேர்ந்த சங்கர் (28) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சண்முகத்தின் மகன் சதிஷ்குமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயம் அடைந்த சதீஷ்குமார், சங்கர் தரப்பை சேர்ந்த சாமிக்கண்ணு (44), வெங்கடேஷ் (24) ஆகிய 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரில் சங்கர், சாமிக்கண்ணு, வெங்கடேஷ், ராஜீவ்காந்தி, குலோத்துங்கன் ஆகிய 5 பேரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக கூறியிருந்தார்.

5 பேர் கைது

இதேபோல சாமிக்கண்ணு கொடுத்த புகாரில் சண்முகம், அவருடைய மகன்கள் தமிழரசன் (25), சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் தன்னையும், வெங்கடேசையும் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சங்கர், ராஜீவ்காந்தி, குலோத்துங்கன், சண்முகம், தமிழரசன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story