விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Jun 2017 10:30 PM GMT (Updated: 2017-06-09T00:27:54+05:30)

சீர்காழி அருகே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சி பாரதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

சீர்காழி,

சீர்காழி அருகே செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். இயக்குனர் மனோகரன், வங்கி அலுவலர்கள் ராஜேந்திரன், ரவி, சக்கரவர்த்தி, ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி செயலாளர் மருது வரவேற்றார். இதில் பாரதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகையை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், 2015-16-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 1,068 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 30 லட்சத்து 95 ஆயிரத்து 28 வழங்கப்படுகிறது. இதேபோல் சீர்காழி பகுதியில் உள்ள 23 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது. 2015-16-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்ததற்கான ரசீதை காண்பித்து விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பணத்தை பெற்று கொள்ளலாம் என்றார். இதில் திருவாலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் திருமாறன், ஊராட்சி செயலாளர் பரசுராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story