யூனியன் அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை


யூனியன் அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 9 Jun 2017 4:15 AM IST (Updated: 9 Jun 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் யூனியன் அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை

விருதுநகர்,

விருதுநகர் யூனியனில் உள்ள கூரைக்குண்டு, கே.செவல்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் விருதுநகர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைக்கு வரும் போது மண்வெட்டி, கடப்பாறை, தட்டு, அரிவாள், கூடை ஆகிய 5 பொருட்களை கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறிப்பிட்ட நேரம் அல்லாமல் மாலை நேரத்திலும் வேலைக்கு வரச்சொல்வதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக பஞ்சாயத்து யூனியன் ஆணையர் முனியப்பனிடம் கோரிக்கை மனு கொடுத்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story