மரங்கள் சாய்ந்து மின்கம்பிகள் சேதம்: 3 நாட்களாக மின் இணைப்பு துண்டிப்பு
சிவகங்கை அருகே உள்ள காடனேரியில் மரங்கள் சாய்ந்ததால் மின்கம்பிகள் சேதமடைந்தன. இதனால் அங்கு கடந்த 3 நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
மதகுபட்டி,
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ளது காடனேரி. ஊராட்சியான இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. காடனேரி ஊராட்சிக்கு மதகுபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 500 வீட்டு மின் இணைப்புகளும், 500-க்கும் மேற்பட்ட தோட்ட மின் இணைப்புகளும் உள்ளன. காடனேரி பகுதியில் லேசான காற்றுடன் மழை பெய்தாலே மின்சாரம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
மதகுபட்டியில் இருந்து காடனேரி 5 கி.மீ. தூரத்திலேயே உள்ளது. ஆனால் மின் வழித்தடமோ மதகுபட்டி அருகே உள்ள ஒக்கூர், காளையார்மங்கலம், நகரம்பட்டி மற்றும் காட்டுப்பகுதி வழியாக சுமார் 20 கி.மீ. சுற்றி வருகின்றது. இதனால் மழை பெய்யும் நேரத்தில் காட்டுப்பகுதியில் உள்ள மரங்கள் மின் கம்பிகள் மீது சாய்ந்து சேதமாகிறது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்படுகின்றன.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு காடனேரி பகுதியில் பலத்த மழை பெய்தது. மழையுடன் வீசிய காற்றில் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் காடனேரி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக தொடர் மின் இணைப்பு இன்றி மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். மக்களின் அன்றாட பணிகளுக்கும் மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. மின்சாரம் இல்லாததால் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுவது தடைப்பட்டுள்ளது.
வலியுறுத்தல்
மேலும் துணை மின் நிலையத்தில் இருந்து காடனேரிக்கு மின்சாரம் 20 கி.மீ. சுற்றி வருவதால், இங்கு குறைந்த மின்னழுத்தம் காணப்படுகிறது. இதனால் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் அடிக்கடி பழுதடைகின்றன. இதேபோல் ஊராட்சியால் இயக்கப்படும் குடிநீர் வினியோகிக்கும் மின் மோட்டார்களில் பழுது ஏற்படுகிறது.
காடனேரியில் லேசான மழை பெய்தாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே துணை மின் நிலையத்தில் இருந்து நேரடியாக உயரழுத்த மின் கம்பிகள் கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Tags :
Next Story