நாடார் சமுதாயத்திற்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக முதல்–அமைச்சருக்கு தட்சணமாற நாடார் சங்க தலைவர் கோரிக்கை


நாடார் சமுதாயத்திற்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக முதல்–அமைச்சருக்கு தட்சணமாற நாடார் சங்க தலைவர் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2017 3:00 AM IST (Updated: 10 Jun 2017 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாடார் சமுதாயத்திற்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சருக்கு தட்சணமாற நாடார் சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை,

நாடார் சமுதாயத்திற்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சருக்கு தட்சணமாற நாடார் சங்க தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தட்சணமாற நாடார் சங்க தலைவர் டி.ஆர்.சபாபதி நாடார் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நாடார் சமுதாயம் பாதிப்பு

சமூக வலைதளங்களிலும், சில தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளிலும் நாடார் சமுதாயத்தை சேர்ந்த நாடார் மக்கள் சக்தி நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா என்கவுன்டர் செய்தி வெளியாகி உள்ளது. இவ்வாறான செய்தி வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. வருத்தத்திற்குரியது ஆகும். ஏற்கனவே தமிழக அரசின் நடவடிக்கையால் நாடார் சமுதாயம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பாக வெங்கடேஷ் பண்ணையார் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும் நாடார் சமுதாயத்தை சேர்ந்த பலர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த படுகொலையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக தெட்சணமாற நாடார் சங்கம் சார்பில் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தடுத்து நிறுத்த வேண்டும்

நாடார் சங்கத்தின் மூலமாக கல்விக்கூடங்கள், ஆலயப்பணிகள், சமுதாய சேவைகள், மருத்துவமனைகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் போன்றவற்றை சேவையாக செய்து வருகிறோம். அரசிற்கு முழுமையாக துணைநின்று நாடார் சமுதாயம் செயலலாற்றி வரும்போது இதுபோன்ற என்கவுன்டர் செய்தி வெளியாவது கண்டனத்திற்குரியது. நாடார்களின் தொழில் நிறுவனங்களுக்கும் அரசால் நெருக்கடி கொடுக்கப்படுவதும் கண்டனத்திற்குரியது.

எங்கள் சமுதாயத்திற்கு எதிராக நடக்கும் தாக்குதல்களை தமிழக முதல்–அமைச்சர் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுகிறோம். இல்லையெனில் தமிழக அரசை கண்டித்தும், தமிழக காவல்துறையை கண்டித்தும் தலைநகர் சென்னையிலும், நெல்லையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தெட்சணமாற நாடார் சங்கம் சார்பில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தொடர்ந்து நாடார் சமுதாயத்தினர் மீது கொலை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், மாற்று சமுதாயத்தவர்களின் தூண்டுதலால் எங்கள் சமுதாயத்தவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்யான வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது சங்க பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், உதவி கமிட்டி உறுப்பினர் ஆர்.அந்தோணி நாடார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story