கொடைக்கானலில் ஆதிவாசி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க குரல் கொடுப்பேன்


கொடைக்கானலில் ஆதிவாசி மக்களின் பிரச்சினைகளை தீர்க்க குரல் கொடுப்பேன்
x
தினத்தந்தி 10 Jun 2017 4:45 AM IST (Updated: 10 Jun 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் ஆதிவாசி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக குரல் கொடுப்பேன் என்று மணிப்பூர் சமூக போராளி இரோம் சர்மிளா கூறினார்.

கொடைக்கானல்,

மணிப்பூர் மாநில சமூக போராளி இரோம் சர்மிளா. இவர் தனது காதலர் டேஸ் மாண்ட் கொட்டின் கோவுடன் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் தங்கி உள்ளார். அங்கு இருந்து வெளியே வரும் அவர் அவ்வப்போது நகர் பகுதிக்கு வந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை கடைகளில் வாங்கி செல்கிறார்.

இந்த நிலையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கொடைக்கானல் நகரில் அமைதியான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது காதலரை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன். எளிமையான முறையில் எங்களது திருமணம் நடைபெற உள்ளது.

அடிப்படை பிரச்சினைகள்

கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் ஆதிவாசி மக்களுக்கு அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் அதிக அளவில் உள்ளன. அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தேவைப்பட்டால் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண குரல் கொடுப்பேன்.

மேலும் மணிப்பூரில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு, மத்திய அரசு நிரந்தர தீர்வு காணவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அவருடைய காதலர் டேஸ் மாண்ட் கொட்டின் கோவும் உடன் இருந்தார்.


Next Story