சிவகாசி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது
சிவகாசி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற 4 பேர் கைது புகையிலை பொருட்கள் விற்றவர்களும் சிக்கினர்
சிவகாசி
சிவகாசி டவுன் சப்–இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ரிசர்வ்லைன் மற்றும் பஜார் பகுதிகளில் ரோந்து சென்றார். அப்போது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பாண்டி(வயது 40), கமலக்கண்ணன்(22) ஆகியோரை அனுமதியின்றி பதுக்கி வைத்து மது விற்றுக்கொண்டிருந்ததாக கைது செய்து அவர்களிடமிருந்து 120 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1000–ஐ பறிமுதல் செய்தார்.
இதேபோல சிவகாசி விஸ்வநத்தம் கவிதாநகர் பகுதியில் காளிமுத்து (42), ஜோதிலிங்கம் (37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 32 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்த சாக்கையா(55), பிரபு(35), செந்தில்(35) ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.200 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.