விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயற்சி வண்டல் மண் எடுக்கப்படுவதை தடுக்க கோரிக்கை
ஓமலூர் அருகே ஏரிகளில் இருந்து செங்கல்சூளைகளுக்கு வண்டல் மண் எடுக்கப்படுவதை தடுக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டியில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோட்டேரி, கோட்ட குள்ளமுடையான் ஏரிகள் உள்ளன. சேர்வராயன் மலை பகுதியில் பெய்யும் மழைநீர் மேற்கு சரபங்கா ஆற்றில் கலந்து இந்த ஏரிகளுக்கு வரும். இதன்மூலம் இந்த ஏரிகளில் அதிகளவில் வண்டல் மண், களிமண், மணல் ஆகியவை படிந்துள்ளன.
இந்த நிலையில் தமிழக அரசின் திட்டத்தின்கீழ், இந்த ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 300–க்கும் மேற்பட்ட விவசாயிகள் வருவாய்த்துறையினரிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால், ஆரம்பம் முதலே டிராக்டர் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் அதிகப்படியான வாடகை கேட்பதாலும், வாகனங்கள் கிடைக்காததாலும் மனு செய்திருந்த விவசாயிகள் வண்டல் மண் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.
சாலை மறியல் செய்ய முயற்சி
ஆனால், இதை பயன்படுத்தி ஓமலூர், கோட்டகவுண்டம்பட்டி, புளியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள செங்கல்சூளைகளுக்கு இந்த ஏரிகளில் இருந்து வண்டல் மண் எடுக்கப்பட்டு, ஒரு டிப்பர் லாரி மண் ரூ.3 ஆயிரம் வரை விற்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதேபோல் நேற்று அந்த பகுதியில் ஏராளமான டிப்பர் லாரிகளில் வண்டல் மண் எடுக்கப்பட்டு செங்கல்சூளைகளுக்கு அனுப்பப்படுவதாக அந்த பகுதி விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது.
உடனே டேனிஷ்பேட்டை, வாளித்தோப்பு, சுண்ணாம்புசூளை, சின்னேரிக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோட்டேரி பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், தீவட்டிப்பட்டி–டேனிஷ்பேட்டை சாலையில் கோட்டேரி அருகே சாலை மறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வாடகை நிர்ணயம்
அப்போது அவர்கள், செங்கல்சூளைகளுக்கு வண்டல் மண் எடுக்கப்படுவதை தடுக்க வேண்டும், வண்டல் மண் எடுப்பதில் விவசாயிகளுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். டிராக்டர், டிப்பர் லாரிகளின் வாடகையை அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு வந்து அவர்களை சமாதானம் செய்தார்கள்.
இதையடுத்து விவசாயிகள் காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் ராஜேஷ்குமாரை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை அடங்கிய மனுவை கொடுத்தனர்.
பின்னர் சரபங்கா விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவன நிர்வாகி பெருமாள் கூறியதாவது:–
எங்கள் கோரிக்கைகள் குறித்து தாசில்தாரிடம் தெரிவித்தோம். அதற்கு அவரும், அதிகாரிகளும் பட்டா வைத்து உரிமம் பெற்றுதான் அவர்கள் மண் எடுத்துச்செல்கின்றனர். அந்த மண் செங்கல்சூளைக்கு செல்கிறதா? என நாங்கள் பார்க்க முடியாது. எங்களுக்கு மண் எடுக்கப்பட்டு ஏரி ஆழம் ஆனால் போதும். உங்களுக்கும் உரிமம் கொடுக்கப்பட்டு உள்ளது. நீங்கள் மண் அள்ளிக்கொள்ளுங்கள். டிராக்டர், டிப்பர்களுக்கு அதிக வாடகை கேட்டால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. மீறி சாலை மறியல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுகின்றனர். எனவே, இந்த பிரச்சினையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story