ரூ.10 ஆயிரம் கடன் தராத ஆத்திரத்தில் அண்ணன் மனைவியை கொன்ற ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
ரூ.10 ஆயிரம் கடன் தராத ஆத்திரத்தில் அண்ணன் மனைவியை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
ரூ.10 ஆயிரம் கடன் தராத ஆத்திரத்தில் அண்ணன் மனைவியை கொலை செய்த ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
ரூ.10 ஆயிரம் கடன்மும்பை பாண்டுப் கிழக்கு பகுதியில் வசித்து வந்தவர் சங்கீதா(வயது58). இவர் கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் 26–ந் தேதி வீட்டிற்குள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கீதாவின் மைத்துனர் சந்தோசை(50) கைது செய்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:–
ஆட்டோ டிரைவரான சந்தோஷ் போதை, சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்தார். சம்பவம் நடந்த சில நாட்களுக்கு முன் சந்தோஷ், தனது அண்ணன் மனைவி சங்கீதாவை சந்தித்து ரூ.10 ஆயிரம் கடன் கேட்டார். ஆனால் அவர் சந்தோசுக்கு பணம் தரமுடியாது என கூறிவிட்டார்.
ஆயுள் தண்டனைஇதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும் வீட்டில் இருந்த ரூ.3½ லட்சம் மதிப்பிலான தங்கநகைகளை கொள்ளையடித்து சென்றார்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிவில் சந்தோஷ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டுரங் சதாவாலேக்கர், குற்றவாளி சந்தோசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்.